Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) - பொறுமை தருமே பெருமை துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - அள்ளித் தருவார் லாபகுரு தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - ...
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை)
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) - விடியும் வரை காத்திருங்க
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2017
15:41

சாதனை படைக்கும் மனம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

குருபகவான்  உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு வருகிறார். இது சுமாரான நிலையே. இதனால் பொருள் விரயம், மனக்கவலை, வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.  2018 பிப்.14-ல்  உங்கள் ராசிக்கு வருவதால் எதிலும் மந்த நிலை உருவாகலாம். குடும்பத்தில் கலகம், வாக்குவாதம் ஏற்படலாம்.  குருவின் பார்வை பலத்தால் ஓரளவு கெடுபலன் குறையும். விடியும் வரை காத்திருப்பது போல, ஜென்மகுரு, ஏழரைச்சனி விலகும் வரை, வழிபாட்டில் ஈடுபடுவது நன்மையளிக்கும்.  

ராகு 9-ம் இடமான கடகத்தில் இருப்பதால் முயற்சியில் தடை உருவாகலாம். ஆனால், கேது 3-ம் இடமான மகரத்தில் இருப்பதால் இறையருள் துணை நிற்கும். ஆரோக்கியம் மேம்படும்.

சனி பகவான் உங்கள் ராசியில் இருப்பதால் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். வெளியூரில் தங்கும் சூழ்நிலை உருவாகலாம். 2017 டிச. 19-ல் சனி தனுசு ராசிக்கு மாறுவதால் குடும்பத்தில் பிரச்னையை சந்திக்கலாம். பணத் தட்டுப்பாடு ஏற்படலாம்.
இனிகாலவாரியாக விரிவான பலனை காணலாம்.

2017 செப்டம்பர் – 2018 ஜனவரிகேதுவின் பலத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். ஆன்மிக சிந்தனை மேலோங்கும். சான்றோர் அன்பும் ஆசியும் கிடைக்கும். புதிய வீடு, -மனை வாங்க யோகம் கைகூடும்.

குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டாகும். உடல்நிலை சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் மிதமான வருமானம்  கிடைக்கும். அரசு வகையில்
எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். அதே நேரம் குருபார்வையால் தடைகளை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவை. தொழில்ரீதியான அலைச்சலை தவிர்க்க முடியாது.  

அரசியல்வாதிகள்  முன்னேற்றம் காண்பர். தலைமையின் ஆதரவால் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.  

விவசாயிகள் நெல், கோதுமை, பழ வகைகள், கடலை போன்ற பயிர்களில் வருமானம் கிடைக்க பெறுவர். பெண்கள்  குடும்ப நலனுக்காக பாடுபடுவர். அடிக்கடி ஆன்மிக, சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பர்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

2018 பிப்ரவரி – செப்டம்பர் குடும்ப தேவை ஓரளவு பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகலாம்.  குருவின் பார்வை பலத்தால் சிலருக்கு  திருமணயோகம் உண்டாகும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  வீடு, கார் வாங்க யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் வருமானம்  படிப்படியாக அதிகரிக்கும். அரசு வகையில் உதவி கிடைக்கும். மறைமுக போட்டியாளர்  வகையில் எப்போதும் ஒரு கண் இருப்பது நல்லது.
பணியாளர்கள் பணிச்சுமை, அலைச்சலால் சிரமத்திற்கு ஆளாவர். அதிகாரிகளிடம்
அனுசரித்து போகவும். சிலருக்கு விரும்பாத இட, பணிமாற்றம் ஏற்படலாம். முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். குருபார்வை பலத்தால் பிரச்னைக்குரிய தீர்வு, உடனடியாக கிடைக்கும்.

கலைஞர்களுக்கு விடாமுயற்சி இருந்தால் மட்டுமே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள்,சமூக நல சேவகர்கள் நற்பெயரும், புகழும் கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.  மாணவர்கள்  சுமாராகவே படிப்பர்.

ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவது நல்லது. நட்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை.விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் வருமானத்திற்கு குறைவிருக்காது. நெல், சோளம் போன்றவற்றில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.  பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை.   

பரிகாரம்:
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்
* பவுர்ணமியன்று அம்மனுக்கு பால் அபிஷேகம்
* சனியன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (4.10.2018 முதல் 27.10.2019 வரை) »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி  அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து நன்மை ... மேலும்
 
temple
வெற்றி நோக்குடன் செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் அக்.4ல் 7-ம் இடத்திற்கு செல்கிறார். ... மேலும்
 
temple
மதிநுட்பத்துடன் செயலாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு ... மேலும்
 
temple
மற்றவர் கருத்துக்கு மதிப்பு தரும் கடக ராசி அன்பர்களே!  

குரு பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான ... மேலும்
 
temple
முற்போக்கு சிந்தனை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!  

குருபகவான் ராசிக்கு  3-ம் இடமான துலாமில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.