சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி அபிராமி அம்மன் சமேத ஆதி சுயம்பீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், தேன், விபூதி, தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கரள் திருப்வை, திருவெம்பாவை பாடினர். தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே பால் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.