மகாசரஸ்வதி அம்மன் கோவில் திருப்பணி வேலைகள் தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2011 11:11
கும்பகோணம்: கும்பகோணம் அருகே புளியம்பேட்டை அரவிந்த்நகரில் மகாசரஸ்வதி கோவில் புதிதாக கட்ட தீர்மானித்து கோவில் திருப்பணிக்கமிட்டி சுந்தரமூர்த்தி தலைமையில் அமைக்கப்பட்டது. அதன்பேரில், மகாசரஸ்வதி அம்மன் கோவில் திருப்பணிக்குழுவினர் தீவிரமாக திருப்பணியை செய்து வருகின்றனர். 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள இக்கோவிலுக்கு நன்கொடை வழ ங்கி பக்தர்கள் அம்மன் அருள் பெறுமாறு கோவில் திருப்பணிக்குழு தலைவர் சுந்தரமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினருடன் அரவிந்த் நகர் வாசிகளும் செய்கின்றனர்.