Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூய விண்ணரசி அன்னை ஆலய ... தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா தேவி கிருஷ்ணமாரியம்மன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூரில் ஊஞ்சல் ஊற்சவம்: மழையிலும் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2017
04:08

செஞ்சி: தொடர் மழையிலும் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Default Image
Next News

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்று காலை அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை கோவிலில் இருந்து வாத்தியங்கள் முழுங்க ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தின் போது கூடியிறுந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபம் ஏற்றி வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.

கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன், எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்து சமய உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், திருவண்ணாமலை மோகன் அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், மற்றும் அறங்காவலர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர். செஞ்சி டி. எஸ்.பி., ரவிச்சந்திரன் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.  மேல்மலையனூர் உட்பட விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களிலும் தொடர் மழை பொழிந்து வந்த நிலையிலும் வழக்கம் போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar