வேடந்தாங்கல் : வெள்ளப்புத்துார் அபிராமி அம்மன் கோவிலில், விளக்கு பூஜை விமரிசையாக கொண்டாடப் பட்டது. வேடந்தாங்கல் அடுத்த வெள்ளப்புத்துார் கிராமத்தில், அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆவணி அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அம்மனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவிக்கும் வைபவம் சிறப்பாக நடந்தேறியது.அதையடுத்து, சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், விளக்கு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.