திருநெல்வேலி, மகாவீரர் தினத்தையொட்டி நெல்லையில் சமணர்கள் ஊர்வலம் சென்றனர். திருநெல்வேலிக்கும் சமண மதத்திற்கும் நீண்ட கால தொடர்பு உள்ளது. திருநெல்வேலி டவுனில் சைவத்திற்கு முன்பே சமண மதம் தழைத்தோங்கியிருந்துள்ளது. நெல்லையில் இன்றளவும் நான்கு ரதவீதிகளிலும் சமணர்கள் நீண்ட காலமாக வசிக்கின்றனர். மகாவீரர் தினத்தையொட்டி நெல்லையில் சமணர்களின் ஊர்வலம் நடந்தது. பாண்டுவாத்தியம் இசைத்தபடி, பாடல்கள் பாடியபடி ஆண்களும், பெண்களும் நான்கு ரதவீதிகளிலும் ஊர்வலமாக சென்றனர்.