கீழக்கரை: கீழக்கரை அருகே மாவிலாத்தோப்பு தர்மமுனீஸ்வரர், கருப்பண்ணசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆக. 23 அன்று முதல்கால யாகசாலை பூஜையில், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, யாத்ராதானம், கோபூஜைகள் உள்ளிட்டவை நடந்தது. காலை கடம் புறப்பாட்டிற்கு பின்னர் 10:00 மணியளவில் கொத்தங்குளம் மாதவன் பட்டாச்சாரியார் விமான கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை மாவிலாத்தோப்பு கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.