பதிவு செய்த நாள்
30
நவ
2011
12:11
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த ஆனந்தூர் தான்தோன்றிரீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வரும் டிசம்பர் 1ம் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி இன்று (நவ.,30) காலை 9 மணிக்கு கோ பூஜை, லட்சுமி ஹோமம், புதிய சாமிகளுக்கு கண் திறந்து தச தரிசனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு முதல்கால யாக பூஜை, யாகவேள்வி, உபச்சாரமும், 8 மணிக்கு சுவாமிக்கு யந்திரஸ்தாபனம் செய்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும்1ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, நாடிச்சந்தானம், தம்பதிகள் சங்கல்பமும் 8 மணிக்கு மகா பூர்ணாகுதி, 9 மணிக்கு கலசப்புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 9 மணிக்கு மூலவர், அம்மன் கோபுர கலச கும்பாபிஷேகமும், 9.30 மணிக்கு விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா முருகர், சண்டீஸ்வரர், நவக்கிரகம், சனீஸ்வரர், காலபைரவ மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனந்தவல்லி அம்பிகைக்கும், தான்தோன்றிரீஸ்வரருக்கும் மஹா கும்பாபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. இதனையடுத்து ஊர் பொதுமக்கள் சார்பாக அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாகுழுவினர் மற்றும் ஆனந்தூர் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.