திருப்பத்தூர்: திருப்பத்தூர் அனுமந்த உபாசாகர் நகரில் மகாசக்தி செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. செல்வபுரம் மாரியம்மன், செல்வமுத்து மாரியம்மன் உற்சவர், செல்வ கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகன், ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் விழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 25ம் தேதி கணபதி ஹோமம் முதல் கால யாகசாலை பூஜை, 26ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 27ம் தேதி நான்காம் கால யாக பூஜை நடந்தது. அன்று காலை 9.30 மணிக்கு செல்வமுத்து மாரியம்மன் மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம், அபிஷேகம் நடந்தது. இரவு மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. கும்பாபிஷேக விழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.