புதுச்சேரி:மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.தூய ஜென்மராக்கினி மாதா கோவில் 220வது ஆண்டு பெருவிழா முன்னாள் பேராயர் மைக்கேல் அகஸ்டின் தலைமையில் நேற்று மாலை கொடியேற்றத்து டன் துவங்கியது. பின்னர் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஆலய பாதிரியார் அருளானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று (30ம் தேதி) முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை மாலையில் சிறப்புத் திருப்பலியும் மறையுரையும் நடக்கிறது. 8ம் தேதி காலை 6.30 மணி அளவில் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு ஆடம்பரத் தேர்பவனி நடக்கிறது.