பதிவு செய்த நாள்
01
செப்
2017
01:09
ஊத்துக்கோட்டை:குருப்பெயர்ச்சி விழாவை ஒட்டி, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், நாளை, சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் வளாகத்தில், தாம்பத்ய தட்சணாமூர்த்தி சன்னதி உள்ளது. இங்கு, சுவாமி தனது மனைவி கவுரியை அணைத்தபடி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. நாளை குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. குருபகவான் கன்னி ராசியில் இருந்து, துலாம் ராசிக்கு, நாளை, காலை, 9:31 மணிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி, இக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம், காலை, 5:00 மணிக்கு கணபதி பூஜை, மதியம், 12:00 மணி வரை, தாம்பத்ய தட்சணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தொடர்ந்து, நவக்கிரக ஹோமம், 27 நட்சத்திர ஹோமம், 12 ராசி ஹோமம், ஆயுள்ய ஹோமம், குரு சாந்தி ஹோமம் நடைபெறும். காலை, 8:00 மணிக்கு, குருபகவான், தாம்பத்ய தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது.