ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்க பாண்டிய ராஜாவாக குன்றத்து முருகன் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2017 06:09
திருப்பரங்குன்றம்: மதுரையில் நடக்கும் ஆவணிமூல திருவிழாவில் பாண்டிய ராஜாவாக கலந்து கொள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகினார்.
கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண சுவாமிக்கு பூஜைகள் முடிந்து, சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. பாராதனைக்கு பின்பு சர்வ அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி வழிநெடுகிலும் பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் அருள்பாலித்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றனர். அங்கு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
புட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலையிலும் சுப்பிரமணிய சுவாமி கலந்து கொள்கிறார். செப். 5அன்று ஆடிவீதி உலா நிகழ்ச்சி முடிந்து< 16கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விடைபெறும் நிகழ்ச்சி நடக்கிறது. செப். 6ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பூ பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர். திருப்பரங்குன்றம் கோயில் நடை வழக்கம் போல் திறந்திருக்கும்.