வாக்கிய பஞ்சாங்கப்படி செப்.2 காலை 9:31 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2018 பிப்.14 -மதியம் 3:46 மணிக்கு அதிசாரம் அடைந்து (முன்னோக்கி சென்று) விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.
விருச்சிகத்தில் குரு பகவான் 2018 ஏப்.9- முதல் அக்.3- வரை வக்கிரம் அடைந்து துலாம் ராசியில் இருக்கிறார். நவக்கிரகங்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் குரு. இவர் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் தங்கியிருப்பார். பெரும்பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மை செய்யவே விரும்புவார். கெடுபலன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், அது நமக்கு ஒரு படிப்பினை தருவதற்காகவே இருக்கும்.