பதிவு செய்த நாள்
02
செப்
2017
12:09
நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் கன்னி ராசியில் இருந்து இன்று காலை 9.31 மணி்க்கு துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் அருகே தென்குடிதிட்டை, மதுரை அருகே குருவித்துறை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் , திருச்சி அருகே உத்தமர் கோயில், சென்னை பாடி வலிதாயநாதர், காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் குருகோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட தலங்களிலும், சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதிகளிலும் பெயர்ச்சியை முன்னிட்டு அபிேஷகம், ஆராதனை நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியால், மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்பம். ராசியினருக்கு நற்பலனும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினருக்கு மிதமான பலனும் உண்டாகும். கடகம், துலாம், மீனம் ராசியினர் கோயில்களுக்கு சென்று பரிகாரம் செய்யவேண்டும்.
குறைதீர்க்கும் குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷிணாம்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்த பூதம் த்ரிலோகேசம்
தம் நமாமி ப்ஸகஸ்திபம்
பொருள் : தேவர்கள், ஞானிகளுக்கு குருவாக திகழ்பவரே! பொன் போல பிரகாசிப்பவரே! ஞானமே வடிவானவரே! மூவுலகங்களுக்கும் தலைவனாக விளங்குபவரே! பிரகஸ்பதியே! உம்மை வணங்குகிறோம். இந்த ஸ்லோகத்தை பக்தியுடஜன் 12 முறை படித்தால் குருபகவான் அருளால் குறையனைத்தும் நீங்கி வாழ்வில் குதூகலம் உண்டாகும்.