கன்னிவாடி, கரிசல்பட்டி அருகே காரமடையில், புனித ஆரோக்கியமாதா ஆலய திருவிழா நடந்தது. முன்னதாக, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிழா கூட்டுத் திருப்பலி, மின் அலங்கார ரத ஊர்வலம், சிறப்புப் பிரார்த்தனை நடந்தது. கரிசல்பட்டி, பழைய கன்னிவாடி, காரமடை பகுதியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.