புதுச்சேரி: அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலய 327ம் ஆண்டு பெரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு திருப்பலி நடந்தது. சென்னை கிண்டி குழந்தை ஏசு ஆலய பங்குதந்தை சாமுவேல் சாவியோ திருப்பலி நடத்தினார். அதனைத் தொடர்ந்து மந்திரிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆலய வளாகத்தில் ஏற்றப்பட்டது. நவ நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு சிறிய தேர்பவனி மற்றும் மறையுரை, தேவ நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற உள்ளது. அருட்தந்தையர்கள் அமல்ராஜ், விஜய் அமல்ராஜ், தாஸ், அந்தோணிசாமி இக்னேஷியஸ், லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு மறையுரை வழங்குகின்றனர். 8ம் தேதி மாலை திருப்பலிக்குப்பின் சிறப்பு தேர்பவனி நடக்கிறது. ஆண்டு பெருவிழா புதுச்சேரி, கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நடைபெற உள்ளது.