சென்னிமலை: சென்னிமலை அடுத்த, புஞ்சை பாலதொழுவு கிராமம், ஓலப்பாளையத்தில், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. முன்னதாக வெள்ளிக்கிழமை, யாகசாலை பூஜைகள் தொடங்கின. நான்கு கால யாக பூஜை முடிந்த நிலையில், நேற்று காலை, கோபுர கலச மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சென்னிமலை டவுன், அம்மாபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும் நேற்று காலை, வெகு விமர்சையாக நடந்தது.