கூடலுார் கோவிலில் குருப்பெயர்ச்சி ஹோமம்; பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2017 01:09
கூடலுார் : கூடலுார், விநாயகர் கோவிலில் நடந்த குருப்பெயர்ச்சி ஹோமம் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கூடலுார் சக்தி விநாயகர் கோவிலில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஹோமம் வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு குரு மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. 1:30 மணிக்கு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.