வளர்பிறை ஏகாதசிக்கு ‘பத்மநாபா ஏகாதசி’ என்று பெயர். சூரிய வம்ச மன்னன் மாந்தாதா காலத்தில், மழையின்றி வறட்சி உண்டானது. பத்மநாபா ஏகாதசி விரதமிருந்து திருமால் அருளால் மழை வளம் பெற்றான். இந்நாளில் (அக்.1) நீராடி பெருமாள் கோயிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். மழை வளம் பெருக நாமும் இந்நாளில் விரதமிருப்போம்.