பதிவு செய்த நாள்
05
செப்
2017
03:09
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம் அடுத்த, பொடையன்தெருவில் எழுந்தருளிவரும் சிவசக்தி மாரியம்மன், அம்மன், ஆதிசக்தி விநாயகர், குபேர விநாயகர், நவகிரகங்கள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு, கும்பாபிஷேக விழா கடந்த, 20ல், யாகசாலை கால் போடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, கிராம சாந்தி நிகழ்ச்சி, கணபதி ஹோமம், முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, ஆதிசக்தி விநாயகர் வழிபாட்டுடன் யாகபூஜை தொடங்கி, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.