பதிவு செய்த நாள்
05
செப்
2017
03:09
வீரகனூர்: தலைவாசல் அருகே, செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. தலைவாசல், வேப்பம்பூண்டி ஏரி அருகில், செல்லியம்மன் கோவில் உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு முதல், யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. நேற்று காலை விநாயகர், பாலசுப்ரமணிய சுவாமி, கருப்பணார், செல்லியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள், கோவில் கலசங்களுக்கு தீர்த்த நீர் ஊற்றினர். வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, வெள்ளையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கானோர், அம்மன் அருள் பெற்றனர்.