கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் சண்முக செட்டித் தெருவில் அமைந்துள்ள சுந்தரவிநாயகர், அன்பு பிரியாள் அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலை சுவாமிக்கு மஹா கணபதி ஹோமம், தீர்த்தக் குடம் அழைத்தல் நிகழ்ச்சி மற்றும் முளைப்பாரி அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. பின், மங்கள இசையுடன் யாகசாலை பூஜை செய்யப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.