விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த தொரவி திரெளபதிஅம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த தொரவி திரவுபதி அம்மன் கோவில் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு , அதன் கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 2 ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை 9:53 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம்புறப்பாடு நடந்தது.காலை 10: 13 மணிக்கு, கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொரவி மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை தொரவி அ.தி.மு.க., பிரமுகர் சுப்பிரமணி மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.