கம்பம்: சுருளி அருவியில் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற ஆதி அண்ணாமலையார் கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதை சீரமைத்து திருப்பணிகள் செய்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி 5ம் தேதி யாகபூஜைகளுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டன. நேற்று காலை 9:45 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபிேஷகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தினர். பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என்ற கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவனடியார் முருகன் சுவாமி, ஆதி அண்ணாமலையார் கோயில் பக்தர்கள் குழு செய்திருந்தது.