Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கங்கையம்மன் கோவில் ஜாத்திரை விழா செங்குந்த மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வருகிறது ஜாத்திரை: ஆடுகள் ஜாக்கிரதை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2017
12:09

ஆர்.கே.பேட்டை;அம்மன் கோவில்களில் நடைபெறும் ஜாத்திரை விழா, வரும் 10ம் தேதி, எல்லை பொங்கலுடன் துவங்குகிறது. அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கிராம தேவதையான அம்மனுக்கு ஆவணி மாதத்தில் நடத்தும் ஜாத்திரை விழா, வரும் 10ம் தேதி, மாலை, எல்லை பொங்கலுடன் துவங்குகிறது. அன்று நள்ளிரவு, சாட்டு நடத்தப்படுகிறது. எல்லை பொங்கல் துவங்கி, அம்மனை கங்கையில் கரைக்கும் வரையில், ஏராளமான ஆடுகளை அம்மனுக்கு பலியிடுவது பகுதிவாசிகளின் வழக்கமாக உள்ளது.

அம்மையார்குப்பம், காமாட்சியம்மன் கோவிலில், வரும் 10ம் தேதி, சாட்டு, 11ம் தேதி, பெண்கள் மாவிளக்கு ஏற்றி விரதத்தை துவங்குகின்றனர். 12ம் தேதி, பூந்தேர் ஊர்வலம் மற்றும் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளுகிறார். வரும் 13ம் தேதி, இரவு யானை வாகனத்தில் உலா. வியாழக்கிழமை காமதேனு வாகனத்திலும் எழுந்தருளும் அம்மன், வெள்ளிக்கிழமை குதிரை வாகனத்தில் உலா வருகிறார். பொதட்டூர்பேட்டையில் நடைபெறும் ஆறு நாள் ஜாத்திரைக்கான ஆட்டு சந்தை நாளை துவங்குகிறது. பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஆடுகளை பலியிட உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு, ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட உள்ளன.ஜாத்திரை விழா என்றாலே, அசைவ படையல் நிச்சயம் இடம்பெறும் என்பதால், இது ஆடுகளுக்கு சோதனையான காலகட்டம் தான்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar