பதிவு செய்த நாள்
08
செப்
2017
12:09
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்த மாரியம்மன் கோவில் தாய் வீட்டு பெருந்திருவிழாவில், விருந்தாடியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து செல்லும் விழா நேற்று நடந்தது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்த மாரியம்மன் கோவில் தாய்வீட்டு பெருந்திருவிழா, கடந்த, 5ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 6ல் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, மாரியம்மன் பூத வாகனத்தில், விருந்தாடியம்மன் கோவிலுக்கு திருவீதி உலா சென்றார். இதில், பக்தர்கள், விருந்தாடி அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து சென்றனர். மாலை, செல்லியம்மனுக்கு பொங்கலிடப்பட்டது. இன்று காலை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மேல், வாண வேடிக்கையுடன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வர, பக்தர்கள் உடன் மாரியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து செல்கின்றனர். நாளை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.