நரிக்குடி:நரிக்குடி அருகே தேளி கிராமத்தில் காளியம்மன், முனீஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. இதனையடுத்து பரிவார தெய்வங்களுக்கு அபிேஷகம் நடந்தது. விழாவை முன்னிட்டு முதல் நாள் காலை கணபதி ேஹாமம், எந்திர ஸ்தாபனம், புண்யாவாசகம் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. மாலை மிருத்சங்கிரணம், முதல்கால யாகபூஜை நடந்தது. மறுநாள் காலை கோபூஜை, லட்சுமி பூஜை, இரண்டாம்கால யாகபூஜை நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. காளியம்மன், முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.