பதிவு செய்த நாள்
15
செப்
2017
12:09
சேந்தமங்கலம்: வரலாற்று சிறப்பு மிக்க, பழனியப்பார் கோவிலை புனரமைக்க, கோபுரத்தை இடிக்க கூடாது என, மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொல்லிமலை அடிவாரம், பள்ளிப்பட்டியில் பழனியப்பார் கோவில் உள்ளது. பல நூறு
ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவில், வல்வில் ஓரி காலத்தில் குட முழுக்கு
செய்யப்பட்டுள்ளது. கிருத்திகை, அமாவாசை, தைப்பூசம், பவுர்ணமி, கார்த்திகை தீபம்
ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கோவிலை சீரமைத்து, கும்பாபி?ஷகம்
செய்யும் பணி துவங்கியுள்ளது. இதில், 15 கோடி ரூபாய் மதிப்பில் உணவு கூடம், பொங்கு மண்டபம், தங்கும் அறை, சமுதாய கூடம், கிரிவல பாதை உள்ளிட்ட பணிகள் நடக்கவுள்ளன. தற்போது, கோவிலை சுற்றி அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவில் கோபுரத்தை இடிப்பதாகவும், அதுவரை மூலவருக்கு பூஜைகள்
நடத்துவதை நிறுத்தி வைக்கவுள்ளதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து, பள்ளிப்பட்டி,
மூலப்பள்ளிபட்டி, வெள்ளாளப்பட்டி, சிங்களாந்தபுரம், ஒடுவன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், பக்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று, 20க்கும் மேற்பட்டோர், கோவில் வளாகத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், கோவில் கோபுரத்தை இடிக்க முயற்சி செய்வதையும், மூலவருக்கு பூஜை செய்யப்பட்டது நிறுத்தப்பட்டதையும் கண்டிக்கிறோம் என்றனர்.