பதிவு செய்த நாள்
15
செப்
2017
12:09
ஈரோடு: ஈரோடு, பூம்புகார் விற்பனை நிலையத்தில், கொலுவை அலங்கரிக்கும் வகையில், 54 வகையான பழங்கள் மற்றும் காய்கறி பொம்மைகள் தத்ரூபமாக விற்பனைக்கு வந்துள்ளன.
இதுபற்றி, பூம்புகார் மேலாளர் சரவணன் கூறியதாவது: பூம்புகார் விற்பனை நிலையத்தில், கொலு பொம்மை கண்காட்சி நடந்து வருகிறது. வரும், 19 முதல், வீடு மற்றும் கோவில்களில் கொலு வைக்க துவங்குவர். விஜயதசமி, 29ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, திருப்பதி செட், திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீரங்கம் செட், பத்ரிநாத் செட், வாஸ்து லட்சுமி, விவசாய செட், ஜல்லிக்கட்டு செட், லவ குசா, விநாயகர் எழுதிய மகாபாரதம் செட் என பல விற்பனைக்கு உள்ளன. புதிதாக கோவை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர் பகுதிகளில் இருந்து, காய்கறி மற்றும் பழங்களின் சிறிய பொம்மைகள் வந்துள்ளன. ஆப்பிள், கொய்யா, மாம்பழம், இலந்தைப்பழம், வாழைப்பழம், வாழைக்காய், வாழைப்பூ, உருளை, பீர்க்கன், தர்பூசணி, எலுமிச்சை, மாங்காய், தேங்காய், வெங்காயம், பூண்டு, பீட்ரூட், முருங்கைக்காய், இளநீர் என, 54 வகையான பொம்மைகள், 10 மற்றும், 30 ரூபாய் விலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.