பதிவு செய்த நாள்
16
செப்
2017
12:09
நாமக்கல்: சேந்தமங்கலம் அடுத்த, பச்சுடையாம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபி ?ஷகம் விமரிசையாக நடந்தது. முன்னதாக கடந்த, 13ல் விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, அஷ்ட பைரவர் வழிபாடு நடந்தது. கடந்த, 14 காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, சக்தி எழுந்தருள செய்தல், அம்பிகைக்கு முதல் கால யாக வேள்வி ஆரம்பித்து, தீபாராதனை நடந்தது. இரவு, 10:00 மணிக்கு அஷ்டபந்தன எண் வகை மருந்து சாற்றுதல், கோபுரம் கண் திறப்பு ஆகியவை நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலமந்திர ஹோமம், மாலா மந்திர ஹோமம் நடத்த, யாக சாலையில் இருந்து புறப்பாடு நடந்தது. 7:30 மணிக்கு, கோவில் கலசம், பரிவார தெய்வங்களுக்கு, சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபி?ஷகம், அலங்கார தீபாராதனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.