மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த ராசாபாளையம் தம்பட்டையார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 7:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 8:30 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.