தினமும் சிந்திக்க வேண்டியது பற்றி சொல்கிறார் நபிகள் நாயகம். * மனிதர்கள் செய்த உதவியை சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள். * செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றி சிந்தியுங்கள். * மற்றவர்களின் குற்றங்களை நோட்டமிடுவதை விட உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். * உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களை கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்து விடுவது போன்று துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்து விடும். * உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது, இவ்வுலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும். * அன்பு செலுத்தாதவன், அன்பு செலுத்தப்படுவதற்கு அருகதையற்றவன். * தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக. * உங்களை நம்பி ஒரு செய்தியைச் சொன்னால், அதை பாதுகாத்து வையுங்கள். * தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புபவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும். * ஒரு மனிதன் தன்னுடையவர்களிடத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்ளுதலே அவர்களை ஒழுக்கமாக நடந்து கொள்ளச் செய்தல் ஆகும். * மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதைத் தான் இறைவன் கவனிக்கிறான்.