பதிவு செய்த நாள்
19
செப்
2017
01:09
ஈரோடு: காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு தபால்துறை சார்பில், வெளியிடப்படும், சிறப்புத் தபால் உறை, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், இன்று கிடைக்கும். காவிரி புஷ்கர விழா, காவிரிக் கரைகளில், கடந்த, 12ல் தொடங்கி நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, கொடுமுடியில் நடக்கிறது. இதை சிறப்பிக்கும் வகையில், தபால்துறை சார்பில், சிறப்பு தபால் உறை, கொடுமுடி மகுடேஸ்வரர், பவானி சங்கமேஸ்வரர் கோவிலிலும் இன்று மதியம், வெளியிடப்படுகிறது. கோவில் வளாகத்தில், கிடைக்கும். பக்தர்கள் உரிய தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.