Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமரா ... சபரிமலையில் விமான நிலையம் : ஆலோசனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரவேற்று மகிழுங்கள்... மகேஸ்வரி பாலாவை!
எழுத்தின் அளவு:
வரவேற்று மகிழுங்கள்... மகேஸ்வரி பாலாவை!

பதிவு செய்த நாள்

21 செப்
2017
01:09

நவராத்திரியின் முதல் நாளான இன்று, பூஜையின் போது பாட வேண்டிய பாடல்

மால்அயன்தேட, மறைதேட, வானவர்தேட நின்ற
காலையும், சூடகக் கையையும் கொண்டு - கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது, வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

அம்பாள் : சாமுண்டி
உருவம் : தெத்துப்பல் வாய், முண்டன்
என்ற அசுரனை வதம் செய்து, மாலையாக கொண்டவள்
குணம் : நீதியை காக்க குரூர குணம்
சிறப்பு : சப்த கன்னியர்களில் ஏழாம் கன்னி
நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல், எள்ளோதரை
பூஜை நேரம் : காலை, 10:30 - 12:00 மணி வரை, மாலை, 6:00 - 7:30 மணி வரை
மலர் : மல்லிகை, வில்வம்
தாம்பூலங்கள் : ஏழு வகையான மங்கலப் பொருட்கள்
பாட வேண்டிய பாடலின் ராகம் : காம்போதி

இன்று பூஜை செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், 8ம் எண்ணில் பிறந்தவர்கள், சனி அல்லது ராகு திசை நடப்பவர்கள், லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள். அலங்காரம்: அம்பாளுக்கு, மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி, வணங்க வேண்டும்; -மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள்; சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி இன்று, ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.

அலங்கார காரணம்: அன்னை ராஜராஜேஸ்வரி இந்த உலகிலுள்ள அசைகிற, அசையாப் பொருட்கள் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து, அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு - மகேஸ்வரி, கவுமாரி, வராகி
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு - மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி
கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு - சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி

ஆக, மொத்தம் இந்த ஒன்பது நாட்களின் சிறப்பையும், பெருமையையும், பலன்களையும் நாம் தெரிந்து கொள்வது, நமக்கு சிறப்பு பலன்களை தரும் என்பது மிகையில்லை.

நவராத்திரியில், ஒன்பது படிகளில் கொலு வைக்கும் முறை:

முதல் படி : ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும், புல், செடி, கொடி போன்ற, தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்
இரண்டாம் படி: இரண்டறிவு கொண்ட, நத்தை, சங்கு போன்ற, பொம்மைகள் இருத்தல்
வேண்டும்
மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களை விளக்கும், கரையான், எறும்பு போன்ற, பொம்மைகள் இடம் பெற வேண்டும்
நான்காவது படி: நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும், நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்
ஐந்தாவது படி: ஐந்தறிவு கொண்ட, நான்கு கால் விலங்குகள், பறவைகள் பொம்மைகள் இடம் பெற வேண்டும்
ஆறாவது படி : ஆறு அறிவு படைத்த, உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெறவேண்டும்
ஏழாவது படி: மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்
எட்டாவது படி: தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்
ஒன்பதாவது படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும், மும்மூர்த்திகள். அவர் தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar