பதிவு செய்த நாள்
21
செப்
2017
01:09
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில், உலக நன்மை வேண்டி, லட்சார்ச்சனை பெருவிழா, இன்று முதல் துவங்கி பத்து நாட்கள் நடக்கிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட, பண்ணாரி செல்லும் சாலையில் புதுவடவள்ளி பகுதி உள்ளது. இங்கு நாகத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கல்வி, செல்வம், வீரம் வேண்டியும் உலக நன்மைக்காகவும், லட்சார்ச்சனை பெருவிழா இன்று தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது. 108 கலசம், 108 விநாயகர், 108 அகல் விளக்குகள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன.