பதிவு செய்த நாள்
21
செப்
2017
01:09
கரூர்: காவிரி மஹா புஷ்கர விழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி புஷ்கரம் விழா நடக்கிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு. இதன்படி துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கர விழா, இந்த ஆண்டு காவிரி ஆற்றில் கொண்டாடப்படுகிறது. 144 ஆண்டுகள் கழித்து நடப்பதால், இது ’மஹா புஷ்கரம்’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. காவிரி மஹா புஷ்கர விழா, கடந்த, 12 தொடங்கி, வரும், 24 வரை கொண்டாடப்படுகிறது. இதன்படி, கரூர் அடுத்த நெரூர் காவிரியில் நேற்று புஷ்கரம் விழா கொண்டாடப்பட்டது. காவிரி ஆற்றில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவாரம், திருப்புகழ், பாராயணம் செய்து, காவிரி ஆரத்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினர்.