பதிவு செய்த நாள்
21
செப்
2017
01:09
தாரமங்கலம்: பரவலாக கிடந்த கற்தூண்களை காக்க, ஒரே இடத்தில் குவிக்கப்பட்டன. தாரமங்கலம், கைலாசநாதர் கோவில், கி.பி., 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அப்போது, கட்டுமானப்பணி முடிந்து எஞ்சிய கற்தூண்கள், கோவில் எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்தன. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், சீரமைப்பு பணி நடந்ததால், அவற்றை, அரச மரத்தடியில் குவித்தனர். தொடர்ந்து பராமரிக்காததால், அவை சிதிலமடைந்தன. அவற்றில் தேங்கும் மழைநீரால், கொசு உற்பத்தியாவதாக புகார் சென்றது. இதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள், நேற்று, இயந்திரம் மூலம், கற்தூண்களை ஒரே இடத்தில் சேர்த்தனர். சில மாதங்களில், கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால், அப்போது, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.