பதிவு செய்த நாள்
22
செப்
2017
01:09
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை பாவ நாராயண பெருமாள் கோவிலில், நவராத்திரி விழா முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கரூர் - திருச்சி பழைய சாலையில், பாவ நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி விழா முன்னிட்டு ஆண்டுதோறும் கொலு வைத்து, பூஜை செய்வது வழக்கம். இதன்படி, நேற்று நவராத்திரி தொடங்கியதை அடுத்து, கோவில் வளாகத்தில், விநாயகர், முருகன், கிருஷ்ணர், சரஸ்வதி, துர்காதேவி முதலான சுவாமி சிலைகள் மற்றும் பல வகையான அழகு பொம்மைகள் கொலுவில் வைத்து, பூஜை செய்யப்பட்டது. இதில், லாலாப்பேட்டை சுற்றியுள்ள பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.