பதிவு செய்த நாள்
22
செப்
2017
01:09
திருச்செங்கோடு: திருப்பதிக்கு, பூமாலைகள் அனுப்பும் நிகழ்வு, திருச்செங்கோட்டில் நடந்தது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அகர மகால் திருமண மண்டபத்தில் இருந்து, ஆந்திரா மாநிலம், திருப்பதி பிரம்மோற்சவ திருவிழாவுக்கு, 6,000 கிலோ மலர்களை, மாலைகளாக தொடுக்கும் நிகழ்வு, கொங்கணாபுரம், நாராயண நித்ய புஷ்ப கைங்கரிய சபா சார்பில் நடந்தது. நிர்வாகிகள் சந்திரசேகர், கனகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். சுற்றுவட்டாரங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து உள்ளிட்ட, பல வண்ண பூக்களை, இறைப்பணியில் ஆர்வமுள்ள பக்தர்கள் மாலைகளாக தொடுத்தனர். மேலும், கரும்பு தென்னம்பாளை, தென்னங்குருத்து, இளநீர், பாக்கு குலைகள், மாங்கொத்துகள், 10 ஆயிரம் ரோஜா செடிகள், ஆகியவையும், திருப்பதிக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.