இளையான்குடி, இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலின் நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு ராஜாங்க சேவை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காஞ்சியில் வாழ்ந்த கண்கண்ட தெய்வம் என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. மூன்றாம் நாளன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.