கீழக்கரை, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த செப்., 15 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. செப்.,18 ம்தேதி 33 அடி உயரமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் பூத பலி, 108 கலச பூஜைகள் நடந்தது. ஹோம வேள்வி சங்கல்ப பூஜையில் சுத்திகரணம் செய்யப்பட்ட புனித நீரால் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. செப்., 21 அன்று வல்லபை ஐயப்பன் புலியின் மீது அமர்ந்து, வில், அம்புடன் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பாடப்பட்டு, மூலவருக்கு ஆராட்டு வைபவம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன்சுவாமி, வல்லபை ஐயப்பா சேவை நிலைய அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.