பதிவு செய்த நாள்
25
செப்
2017
01:09
திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகப்பெருமாள் கோவில்களில் நவராத்திரி வழிபாடு நடந்து வருகிறது. கடந்த, 21ம் தேதி துவங்கி, வரும், 29ம் தேதி வரை, தினமும், விசாலாட்சியம்மன் உட்பட, முப்பெரும் தேவியருக்கும் சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜைகளும் நடந்து வருகிறது. திருப்பூர் தமிழ்ச்சங்கம், பிரேமா கல்வி நிறுவனங்கள் சார்பில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. 108 ஸ்ரீதுர்கா பூஜா சேவா சமிதி சார்பில், யுனிவர்சல் ரோடு, ஹார்வி குமாரசாமி மண்டத்தில், 18 வகையான துர்கா சிலைகளை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து, நவராத்திரி துர்கா பூஜை நடந்து வருகிறது. இதில், குஷ்மண்டா தேவி பூஜை நடந்தது. ஷாலினி வர்மா, ரஞ்சித்குமார் ராமு மற்றும் சோமு குழுவினரின் பஜனையும் நடைபெற்றது.