* எல்லாம் கடவுள் செயல் என சும்மா இருப்பது கூடாது. அறிவை நல்வழியில் பயன்படுத்தி வேலையில் ஈடுபட வேண்டும். வேகம், விவேகம் இரண்டும் வெற்றிக்கு அவசியமானவை. * கோயிலில் மட்டும் கடவுளைக் காண்பதில் பயனில்லை. எல்லா உயிர்களிடமும் அவர் இருப்பதை உணர்வதே பக்தி. * விதை, மண்ணைப் பற்றிக் கொண்டு தன்னை நிலை நிறுத்துவது போல, நம்பிக்கையுடன் கடவுளைப் பற்றிக் கொண்டால் வாழ்வு நலம் பெறும். * இழந்த பணத்தைக் கூட சம்பாதிக்கலாம். ஆனால், இழந்த காலத்தை மீண்டும் பெற முடியாது. * கடவுள் இல்லை என மறுப்பது,பேச்சுக்கு ஆதாரமான நாக்கைக் கொண்டே எனக்கு நாக்கு இல்லை என கூறுவது போலாகும். * சுயநல எண்ணத்துடன் பக்தி செலுத்துபவரைக் கண்டால் கடவுள் ஆயிரம் அடி விலகிச் செல்வார். * கிணற்றில் விழ ஒரு நிமிடம் போதும். ஆனால், மீண்டும் எழுந்து வர போராட வேண்டியிருக்கும். இதுவே ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு. சொல்கிறார் மாதா அமிர்தானந்தமயி