பதிவு செய்த நாள்
27
செப்
2017
02:09
ஈரோடு: கோட்டை பெருமாள் கோவில், ஸ்ரீவாரி உண்டியலில் திரளான பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி, ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் மூன்று தற்காலிக, ஸ்ரீவாரி உண்டியல் வைக்கப்பட்டது. இவை நேற்று எண்ணப்பட்டது. இதில், 59 ஆயிரத்து, 900 ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது. அர்ச்சனை சீட்டு, சிறப்பு தரிசனம், கட்டளை கட்டணம், நன்கொடையும் வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.