பதிவு செய்த நாள்
28
செப்
2017
11:09
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பகுதியில், வீடு ஒன்றில், ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. திருக்கழுக்குன்றம் பெரிய தெருவில் உள்ள பரமானந்தம் பார்வதி என்பவரின் வீட்டில், 26 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் புதுமையான முறையில், பிரமாண்டமாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. வேலுார் தங்கக்கோவில், மாடம்பாக்கம் சித்தர் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், அமெரிக்கா நியூ ஜெர்ஸி என்ற இடத்தில், 125 ஏக்கர் பரப்பில், 100 கோடி ரூபாய் செலவில் திறக்கப்பட்ட பாலாஜி கோவில் போல கொலுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தாண்டு, பனி படர்ந்த கைலாய மலை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, இமயமலையில் சிவப்பெருமான் அமர்ந்திருக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை காண்பதற்கு திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் வருகின்றனர்.