பதிவு செய்த நாள்
28
செப்
2017
01:09
ஊத்துக்கோட்டை:சீனிவாச பெருமாள் கோவிலில், 10ம் ஆண்டு உற்சவர் பூஜை மற்றும் அன்ன தான நிகழ்ச்சி, வரும், 30ம் தேதி நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை, பிராமணத் தெருவில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள், 23ம் தேதி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், வரும், 30ம் தேதி, அதே பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றயை தினம் கோவிலில் இருந்து, சுவாமியின் திருஉருவப் படம் அலங்கரிக்கப்பட்டு, ஊத்துக்கோட்டையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.