அமிர்த கணபதி கோவிலில் நவராத்திரி குத்துவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2017 01:09
விழுப்புரம்: விழுப்புரம் கோவிந்தசாமி நகரில் உள்ள அமிர்த கணபதி கோவிலில் நவராத்திரி குத்துவிளக்கு பூஜை நடந்தது. நவராத்திரி விழாவையொட்டி, விழுப்புரம் கோவிந்தசாமி நகரில் உள்ள அமிர்த கணபதி கோவிலில் நேற்று முன்தினம் மாலை, கணபதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 5:30 மணிக்கு, தீபாராதனையும், 6:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், 6:30 மணிக்கு, பெண்கள் 108 குத்துவிளக்குகளை பூஜிக்கும் வழிபாடும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.