Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெருப்பு படுக்கையில் குழந்தை ... திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன்: ஜேசுதாஸ் விருப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2017
12:10

நாகர்கோவில்: கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன், என்று கர்நாடக இசை கலைஞர் ஜேசுதாஸ் கூறினார்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அதிகமான பக்திபாடல்களை பாடி வருபவர் ஜேசுதாஸ். சபரிமலையில் காலையில் நடை திறக்கும் போது இவர் பாடிய ஐயப்ப சுப்ரபாதம், இரவில் இவரது தாலாட்டு பாடலான அரிவராசனம் பாடல் ஒலிபரப்பப்படும். இவர் சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் செல்ல அனுமதி கோரியிருந்தார். அதற்கு நிர்வாக கமிட்டி இதற்கு அனுமதி வழங்கியது.ஆண்டு தோறும் அக்.ஒன்றாம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு மன்றத்தில் ஜேசுதாஸ் கர்நாடக இசை கச்சேரி நடத்துவார். நேற்று முன் தினம் அந்த நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் செப்., 30 அல்லது அக்.ஒன்றாம் தேதி ஜேசுதாஸ் பத்மநாபசுவாமி கோயில் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோயில் செல்ல வில்லை.

இது குறித்து அவர் இன்னிசை கச்சேரி மேடையில் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குருவாயூர் கோயில் செல்ல எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த கோபத்தில் இனி ஒரு கிருஷ்ணன் கோயிலுக்கும் செல்ல மாட்டேன், என்று கூறியிருந்தேன். ஆனால் கடந்த மூகாம்பிகா கோயிலுக்கு செல்லும் வழியில், எனது நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் உடுப்பி கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றேன். அப்போது சுவாமிக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த தரிசனம் என்னால் மறக்க முடியாதது.குருவாயூர் பிரச்னையில் பிடிவாதமாக இருந்தததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதுபோல கடவுள் அழைக்கும் போது பத்மநாபசுவாமி கோயில் செல்வேன். அங்கு பாடுவேன். நேரம் வரும் போது கடவுள் என்னை அழைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar