நெல்லையில் விட்டல்தாஸ் மகராஜின் பஜனை, சொற்பொழிவு இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2011 11:12
திருநெல்வேலி : கும்பகோணம் கோவிந்தபுரம் விட்டல்தாஸ் மகராஜின் நாம ஸாகர் பஜன் மற்றும் சொற்பொழிவு நெல்லை சங்கீத சபாவில் இன்று (6ம் தேதி) துவங்குகிறது. உலகப்புகழ் பெற்ற அனந்தராம தீட்சதர் வம்சத்தில் வந்தவர் விட்டல்தாஸ் மகராஜ். மயிலாடுதுறை-கும்பகோணம் மார்க்கத்தில் கோவிந்தபுரத்தில் விட்டல் ருக்மணி சமஸ்தான் (பாண்டுரங்க பஜனாஸ்ரமம்) அமைப்பை உருவாக்கி பக்தி மற்றும் ஆன்மிக பணிகளை செய்து வருகிறார். கோவிந்தபுரத்தில் 132 அடி உயரத்தில் பாண்டுரெங்கன் கோயிலை கட்டியுள்ளார். கர்ப்பக்கிரஹகத்தில் பக்தர்கள் சுவாமி மற்றும் தாயாரின் திருவடிகளை தொட்டு வணங்கும் வகையில் முற்றிலும் குளிர்சாதன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரஹகத்தின் கீழ் பகுதியில் 108 கோடி விட்டல் நாமங்கள் வைக்கப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட பசுக்களை பிருந்தாவனத்தில் இருந்து வரவழைத்து மிகப்பெரிய கோசாலையையும் உருவாக்கியுள்ளார். இவ்வளவு சிறப்பான பணிகளில் ஈடுபட்டுள்ள விட்டல்தாஸ் மகராஜ் நாம சங்கீர்த்தனம் மற்றும் உபன்யாசம் நெல்லை சங்கீத சபாவில் இன்று ( 6ம் தேதி) துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பஜனை மற்றும் உபன்யாசம் நடக்கிறது.ஏற்பாடுகளை டாக்டர்கள் ஜெயமுருகன், ஆனந்தி மற்றும் பாண்டுரெங்கன் பக்தர்கள் செய்துள்ளனர். பக்தர்கள் நிறுத்த ஜங்ஷன் ம.தி.தா.இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.