பெருந்துறை: கோட்டை மாரியம்மன் மற்றும் முனியப்பசுவாமி கோவில் பொங்கல் விழா, நேற்று தொடங்கியது. பெருந்துறை, புது பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன், கோட்டை முனியப்பசுவாமி கோவில் பொங்கல் விழா, பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. வரும், 10ல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அக்.,18ல் தீபாவளி பண்டிகை நாளில், பொங்கல் வைபவம் நடக்கிறது. அன்று இரவு, கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.